நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவ ஆலோசனைக் கூட்டம்
சிதம்பரம்: ஆனி திருமஞ்சனம் உற்சவம் தொடர்பாக, பெரும்பாலான துறை அதிகாரிகள் பங்கேற்காத, சம்பிரதாய ஆலோசனைக் கூட்டம் சி தம்பரத்தில் நடந்தது. சிதம்பரம், நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் உற்சவம், வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 9ம் தேதி ÷ தரோட்டமும், 10ம் தேதி மகா தரிசன உற்சவமும் நடக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு, அரசு துறைகள் செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும், கோவில் தீட்சிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், சிதம்பரம் ஆர்.டி.ஓ., விஜயலட்சுமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பிரச்னை ஏதுமின்றி உற்சவத்தை நடத்துங்கள் என, பேசி முடிக்கப்பட்டது. மதியம் 12:00 மணிக்குத் துவங்கிய கூட்டம், 12:15 மணிக்கு முடிந்தது. கூட்டத்தில் பெரும்பாலான துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை. வெளியூர் பக்தர்களுக்கான குடிநீர், கழிவறை, பாதுகா ப்பு, அடிப்படை வசதிகள் செய்வது, தரிசனம் நடத்தும் நேரம் போன்றவைக் குறித்து ஆலோசிக்காமல், ரகசியமாக சம்பிரதாயத்திற்காக கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.