உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிக் கற்களின் பரிகாரம்!

ராசிக் கற்களின் பரிகாரம்!

ஒவ்வொரு ராசிக்காரரும் அவரவர்க்கு உரித்தான ராசிக் கற்களை அணிந்தால்தான் பயன்பெற முடியும் என்பது ஜோதிட விதி. ஆனால் வைரம்,  வைடூரியம், மாணிக்கம், மரகதம் போன்ற விலை மிகுந்த கற்களை எல்லோராலும் வாங்க இயலாது. அவர்களுக்கு ஓர் எளிய பரிகாரம். திருவிழா  மற்றும் பண்டிகை காலங்களிலும், வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களிலும் கோயிலில் இறைவன், இறைவிக்கு நவரத்தின மாலை, வைரக் கீரிடம்,  ஒட்டியாணம், அட்டிகை என்று விசேஷ அணிகலன்கள் அணிவித்து அலங்காரம் செய்வர். அப்போது நாம் எதிரே நின்று சேவிக்கும்போது நமக்கான  ராசிக் கற்களின் கதிர் வீச்சு நம் மீது விழப் பெற்று நற்பயன் பெறலாம் என்பதில் ஐயமில்லை. ஆதலில், ஆலயம் தொழுவது சாலவும் நன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !