டில்லி தமிழ்ச்சங்கத்தில் ஆன்மிக சொற்பொழிவு
புதுடில்லி : டில்லி தமிழ்ச் சங்கத்தில், ஆன்மிகம் தொடர்பான இரண்டு சொற்பொழிவுகள் நடந்தன. இதில், ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். டில்லி தமிழ்ச்சங்கம் சார்பில், ஆன்மிகம், சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இரு பெரும் ஆளுமைகளின் இலக்கியச் சொற்பொழிவு, சமீபத்தில் நடைபெற்றது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜி.பாஸ்கரன், ’ஆன்மிகப் பண்பாடு” என்ற தலைப்பிலும், மூத்த எழுத்தாளர் மற்றும் பாரதி ஆய்வாளர் பெ.சு. மணி, ’சமூக எழுச்சியில் ஆன்மிகத்தின் பங்கு’ என்ற தலைப்பிலும் பேசினர். இதில், டில்லியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சொற்பொழிவாளர்களை, தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர் கே.வி.கே.,பெருமாள், அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ரா.முகுந்தன் ஆகியோர் கவுரவித்தனர்.