ஜெனகை மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
ADDED :3428 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடந்தன. இதை முன்னிட்டு தற்காலிக, நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. ரூ.6 லட்சத்து 34 ஆயிரத்து 819 வருவாய் கிடைத்ததாக கோயில் நிர்வாக அதிகாரி லதா தெரிவித்தார். ஜெனகை மாரியம்மன் கோயில் ஆனி வெள்ளி உற்சவத்தில் ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.