உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பு : ரூ. 12.50 லட்சம் வசூல்

சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பு : ரூ. 12.50 லட்சம் வசூல்

வத்திராயிருப்பு: சதுரகிரி மலை கோயிலில் நடந்த உண்டியல் திறப்பில் 12.50 லட்சம் ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 4 முறை உண்டியல் திறப்பு நடைபெறும். இந்தாண்டு ஆடி அமாவாசை அடுத்த மாதம் துவங்குவதையொட்டி உண்டியல்கள் திறக்கப்பட்டன. சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலில் ரூ. 11 லட்சம், சந்தன மகாலிங்கசுவாமி கோயிலில் 1.50 லட்சம் பக்தர்களின் காணிக்கையாக வசூலானது. மதுரை அறநிலையத்துறை துணை ஆணையர் செல்லத்துரை, மதுரை உதவி ஆணையர் அனிதா, கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்முருகன் முன்னிலையில் எண்ணிக்கை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !