உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தியூர் குருநாதசுவாமி கோவில் விழாவில் குதிரை சவாரியை முறைப்படுத்த கோரிக்கை

அந்தியூர் குருநாதசுவாமி கோவில் விழாவில் குதிரை சவாரியை முறைப்படுத்த கோரிக்கை

அந்தியூர்: அந்தியூரை அடுத்த, புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் திருவிழா ஆண்டு தோறும் ஆடி மாதம் நடைபெறும். அந்த சமயத்தில் நடக்கும் மாடு மற்றும் குதிரை சந்தை மிகவும் புகழ் பெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து மாடு, குதிரைகளை கண்காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் ஏராளமானோர் கொண்டு வருவர். ஒரு வார காலம் நடக்கும் இந்த சந்தையை கான, சுவாமி தரிசனம் செய்ய லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள். கண்காட்சிக்காக, கூட்டம் கூடும் இடத்தில் குதிரை சவாரி நடத்தப்படுவது வழக்கம். கடந்த, 2014ம் ஆண்டு, சவாரி செய்த ஒருவர், குதிரை மிரண்டதால், தவறி விழுந்து உயிரிழந்தார். கடந்த ஆண்டு சவாரியின்போது வேடிக்கை பார்த்த பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த குதிரையினால் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், வரும் ஆக., மாதம், நடைபெற உள்ள பண்டிகைக்கு தற்காலிக கடைகள் மற்றும் குதிரைச்சந்தைக்கு இடம் ஏலம் விடுவது வரும் வாரத்தில் நடக்க உள்ளது. குதிரை சந்தைக்கு இடம் ஏலம் எடுப்பவர் மக்கள் கூடும் இடத்தில் சவாரி விடக்கூடாது. ஒதுக்குப்புறமான இடத்தில் மூங்கில் தடுப்பு அமைத்து அதற்குள் சவாரி நடத்த வேண்டும் என்ற நிபந்தைனையுடன் ஏலம் விட வேண்டும். இல்லை எனில் இந்த ஆண்டும் பல பக்தர்கள் படுகாயம் அடையக்கூடும். என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !