கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் மண்டு திருவிழா
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே, மாரியம்மன் கோவில் மண்டு திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தேவீரஅள்ளி கிராமத்தில், மாரியம்மன், காளியம்மன், பட்டாளம்மன் கோவில், பத்து நாள் மண்டு திருவிழா, 20 ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, கூழ் ஊற்றுதல், அம்மன் அனுப்புதல், மாரியம்மன் திருவிழா, காளியம்மன் சிம்ம வாகனத்தில், பந்தகாசியில் அமர்ந்து கோவிலை வந்தடைதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத்தொடர்ந்து, விநாயகர் அபி ?ஷகம், பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏழாம் நாள் திருவிழாவில், 100 க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. கடைசி நாளான நேற்று முன்தினம் மாலை, எருது கட்டு விழா, மஞ்சள் நீராட்டும் விழா நடந்தது. விழாவில், பெங்களூரு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.