உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமண்டூர் திரவுபதி கோவிலில் படுகளம் நிகழ்ச்சி கோலாகலம்!

மாமண்டூர் திரவுபதி கோவிலில் படுகளம் நிகழ்ச்சி கோலாகலம்!

மாமண்டூர்: திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழாவில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த துாசி மாமண்டூர் பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த விழா, கடந்த, 16ல் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, வில் வளைப்பு, சுபத்திரை திருக்கல்யாணம், ராஜசூய யாகம், அர்ச்சுனன் தபசு, கண்ணன் விடும் துாது, பதினெட்டாம் போர், துரியோதனன் படுகளம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, தருமர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. நேற்று நடந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று இரவு தீமிதி திருவிழா மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !