உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார்‚  கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ நேற்று முன்தினம் மகாசனி பிரதோஷ வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் வீரட்டா÷ னஸ்வரருக்கு அபிஷகம், அலங்காரம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு அபிஷகம்‚ சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நந் திகேஸ்வர பெருமானுக்கு ஆயிரத்து 8 குடம், பால் அபிஷகமும்‚ மூலவர் வீரட்டானேஸ்வரர்‚ நந்திகேஸ்வரருக்கு ஒருசேர பிரதோஷ மகா  தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து வாகன மண்டபத்தில் பிரதோஷ நாயகருக்கு வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாய கர் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம்வந்து‚ அருள் பாலித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளுக்கான  ஏற்பாடுகளை சிவாச்சாரியர்களும் விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !