ரமலான் சிந்தனைகள்-28: தர்ம சிந்தனை வேண்டும்
ரம்ஜான் பண்டிகையை விரைவில் கொண்டாட இருக்கிறோம். நோன்பிருந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம், அவனிடம் இருந்து கருணையைப் பரிசாகப் பெற்றுள்ளோம். பசியின் கொடுமையை உணர்ந்து, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை உணர்ந்திருக்கிறோம். நபிகள் நாயகத்தின் அறிவுரைப்படி, நோன்பு பெருநாள் தர்மத்தை தொழுகைக்கு முன்னரே கொடுத்து விட வேண்டும். ஆண்களும், பெண்களும் நோன்புப் பெருநாள் தொழுகையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.“நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் இளம்பெண்களையும், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும், வாலிபப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் என எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மட்டும் தொழும் இடத்தில் இருந்து விலகி, நல்ல காரியங்களில் பங்கெடுக்க வேண்டும். முஸ்லிம்களின் அழைப்புப் பணியிலும் பங்கெடுக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள்,” என உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த கட்டளையை ஏற்று ரம்ஜானை தர்ம சிந்தனையுடன் கொண்டாட தயாராவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.49 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.19 மணி.