உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிப்பிரதோஷ சிறப்பு பூஜை

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிப்பிரதோஷ சிறப்பு பூஜை

வால்பாறை: வால்பாறை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் சனிப் பிரதோஷ பூஜை நடந்தது. இக்கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் நேற்றுமுன்தினம் நடந்த சனிப்பிரதோஷபூஜையையொட்டி மாலை 5:30 மணிக்கு, சிவலிங்கத்துக்கு சந்தனம், திருநீரு, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜைகள் நடந்தன. மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்தார். இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !