உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி அமாவாசை: ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு!

ஆனி அமாவாசை: ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு!

ஆனி கடைசி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்கினி தீர்த்தக்கடலில் ஏராளமான பக்தர்கள் திதி பூஜை செய்து புனித நீராடினர்.  அதேபோல் ஆனி மற்றும் சோமவார அமாவாசை முன்னிட்டு, ஹரித்துவாரில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கொடுமுடி, ராமேஸ்வரம், பவானி, மேட்டூர், கல்லவடக்கம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அங்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளிலேயே தர்ப்பணம் கொடுப்பர். அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன், வாழை இலையில் மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி, கதம்ப பூ, வாழைப்பழம், தேங்காய், எலுமிச்சை, அகத்திக்கீரை, பூசணிக்காய், வாழைக்காய், காரைக்காய், கத்திரிக்காய், அவரைக்காய், அரிசி, எள் பிண்டம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !