உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆனி தெப்ப உற்சவம்!

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ஆனி தெப்ப உற்சவம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆனி மாத தெப்ப உற்சவம், நேற்று மாலை நடந்தது.திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு, ஆனி மாதத்தை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப உற்சவம், நேற்று மாலை துவங்கியது. மாலை, 6:30 மணியளவில், உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தெப்பலில் எழுந்தருளினார். பின், தெப்பலில், மூன்று முறை உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றும், நாளையும் மாலை தெப்ப உற்சவம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !