உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., பெரியாழ்வார் ஆனி உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவி., பெரியாழ்வார் ஆனி உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6.45 மணிக்கு மாடவீதிகளில் கொடிபட்டம் சுற்றி வந்து பெரியாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் ரகுராம பட்டர் கொடியை ஏற்றி, தீபராதனை செய்தார். விழாவில் செயல்அலுவலர் ராமராஜ் மற்றும் பட்டர்கள் அனந்தராமன், சுதர்சன், கிருஷ்ணன், கோயில் அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர், இதனையடுத்து தினமும் மாலை 6 மணிக்கு பெரியாழ்வார் வீதியுலா நடக்கிறது. 8ம் தேதி கருடசேவையும், 12ம்தேதி காலை 8மணிக்கு செப்புதேரோட்டமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !