உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்கு தங்கத்தால் ஆன பஞ்ச பருவ கேடயம்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்கு தங்கத்தால் ஆன பஞ்ச பருவ கேடயம்!

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், தங்கத்தால் செய்யப்பட்ட பஞ்ச பருவ கேடயத்தில் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், மாடவீதிகளை வலம் வந்து அருள் பாலித்தார்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மாதந்தோறும் பஞ்ச பருவ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு ஏகாதசி ஆகிய ஐந்து நாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், மாடவீதிகளை வலம் வந்து அருள் பாலிப்பார். தங்கதோலுக்கினியான் எனப்படும் இந்த பல்லக்கில் உள்ள பஞ்ச பருவ கேடயத்தை, சேவார்த்தி ஒருவர், தங்கத்தில் செய்து கொடுத்துள்ளார். தேக்கு மரத்தில் செய்யப்பட்ட பல்லக்கு, செப்பு தகட்டின் மீது, 1.3 கிலோ எடை கொண்ட தங்க ரேக்குகள் வேயப்பட்டுள்ளது; இதன் மதிப்பு 55 லட்சம் ரூபாய். புதியதாக செய்யப்பட்ட தங்க பஞ்ச பருவ கேடயத்தில், உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் அமர்ந்து, மாட வீதிகளை நேற்று மாலை வலம் வந்து அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !