பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகுலம்பலா யாகம்
ADDED :3419 days ago
விழுப்புரம்:பாதுார் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகுலம்பலா யாகம் நடந்தது. பாதுார் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில், அமாவாசையை யொட்டி நிகுலம்பலா யாகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 10: 30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் சேர்ப்பிக்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் ஆசியுடன் 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் கொட்டினர். அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகும்பலா யாகத்தில் எம்.எல்.ஏ.,குமரகுரு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிராஜ் ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர்.