உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூளவாடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

பூளவாடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

உடுமலை: பூளவாடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூளவாடியில், பழமை வாய்ந்த,  ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரராஜ பெருமாள் கோவில், நீண்ட காலத்துக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு, கடந்த மாதம் கும்பாபிேஷக விழா நடந்தது.  தொடர்ந்து, மண்டலாபிேஷக விழா துவங்கியது. நாள்தோறும், பல்வேறு சிறப்பு பூஜைகள் கோவிலில் நடந்தன. நேற்றுமுன்தினம் நடந்த அலங்கார  பூஜையில், சிறப்பு அலங்காரத்தில், சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார். இந்த பூஜையில், சுற்றுப்பகுதி கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !