உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையின் நாகரிகம் சூலப்புரம் தொல்லியல் சின்னங்கள் கண்டுபிடிப்பு

பழமையின் நாகரிகம் சூலப்புரம் தொல்லியல் சின்னங்கள் கண்டுபிடிப்பு

மதுரை: பேரையூர் அருகே சூலப்புரம் கிராம மலையடிவாரத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் உதயகுமார், மதுரை காமராஜ் பல்கலை முனைவர் பட்ட ஆய்வாளர் முத்துப்பாண்டி மற்றும் பாண்டீஸ்வரன், பால்ராஜ் ஆகியோர் இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அவர்கள் கூறியதாவது: இப்பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் கற்காலத்தை சேர்ந்த கல் வட்டம், ஈமச் சின்னங்களும், முதுமக்கள் தாழிகளும் உள்ளன. கருப்பு சிவப்பு பானைகள், கருப்பு நிற கிண்ணங்கள், குடுவைகள், மூக்குகெண்டிகள், மண்கலயங்கள், தட்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வாளர்கள் இதை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கருதுகின்றனர். மதுரை அருகே கீழடியில் நடக்கும் அகழாய்விலும் இதுபோன்ற பொருட்கள் கிடைப்பதால், சூலப்புரம் கிராமமும் அதே பழமையான நாகரிகத்தை கொண்டதாக இருக்கும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !