உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகமுத்து மாரியம்மன் கோவிலில் மிருகசீரிஷ நட்சத்திர பூஜை!

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் மிருகசீரிஷ நட்சத்திர பூஜை!

புதுச்சேரி: புதுச்சேரி நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 16வது மாத மிருகசீரிஷ நட்சத்திர பூஜை நடந்தது. புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நகரில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த 16வது மாத மிருகசீரிஷ நட்சத்திர பூஜை காலை 5.30 மணிக்கு நடந்தது. 6.00 மணிக்கு நாகமுத்து மாரியம்மனுக்கு ஜலம், சந்தனம் உள்ளிட்ட 16 பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு குங்கும அர்ச்சனை நடந்தது. நாகமுத்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !