கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழா
ADDED :3415 days ago
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் வீதி கெங்கைமுத்து மாரியம்மன் கோவிலில் 3ம் ஆண்டு பிரம்மோற்சவ மற்றும் கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது. பிரம்மோற்சவ மற்றும் கும்பாபிஷேக பூர்த்தி விழா கடந்த 23ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து முக்கிய விழாவான கரக விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு கூழ் வார்த்தல் நடந்தது. இரவு 7 மணிக்கு கரக புறப்பாடு நடந்தது. இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.