வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஜூலை 11ல் கொடியேற்றம்
ADDED :3546 days ago
வடமதுரை, :வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 11ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமியையொட்டி 13 நாட்கள் இத்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் நாள்தோறும் இரவு அனுமார், சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 17ல் திருக்கல்யாணம், ஜூலை 19ல் தேரோட்டம், ஜூலை 21ல் வசந்தம் முத்துபல்லக்கு வைபவம் நடக்கிறது. திருவிழா ஏற்பாட்டினை செயல் மகேந்திரபூபதி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.