உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கோவை : கோவையில் ஒரு சில இடங்களில் நேற்று ரம்ஜான் சிறப்புத்தொழுகையும், ஏழைகளுக்கு தானம் செய்யும் நிகழ்வும் நடந்தது. உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோடு, குனியமுத்துார் சுண்ணாம்புக் காளவாய், கரும்புக்கடை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈத்கா மைதானங்களில், நேற்று காலை, 8:00 மணி முதல் 10:00 மணி வரை ரம்ஜான் சிறப்புத்தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை நிறைவடைந்த பின், ஏழைகளுக்கு முஸ்லிம்கள் தானம் வழங்கினர். இன்று கோவை மாவட்ட அனைத்து ஜமாத் அறிவிப்பின்படி, கோவையிலுள்ள, பள்ளிவாசல், ஜமாத், ஈத்கா மைதானங்களில் காலை 8:00 மணி முதல் சிறப்புத்தொழுகை நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்கின்றனர்; விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !