மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் தேர் திருவிழா
ADDED :3402 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் கிராமத்தில் கோவில் தேரோட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் சக்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 11ம் தேதி துவங்கியது. நேற்று மதியம் 2:00 மணிக்கு, சக்தி மாரியம்மனை திருத்தேரில் எழுந்தருள செய்தனர். கள்ளக்குறிச்சி எம்.பி., காமராஜ், எம்.எல்.ஏ., பிரபு ஆகியோர், வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஊராட்சி தலைவர் பானு, செயலர் அஞ்சாபுலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது.