விஷ்ணுபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
                              ADDED :3402 days ago 
                            
                          
                          அன்னுார் : கரட்டுமேடு மகாலட்சுமி, விஷ்ணு பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழா, 4ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. 5ம் தேதி விமான கலசம் நிறுவுதல், 108 வகை மூலிகை பொருட்களால், வழிபாடு செய்தல், வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை 6:50 மணிக்கு விமான கலசங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபரசாமி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகள், கரட்டுமேடு சித்தர் துரைசாமிகள் அருளுரை வழங்கினர். பஞ்சமுக தரிசனம் நடந்தது. காரமடை பந்தசேவை தாசர்கள் சங்குநாதம் இசைத்தனர். சுவாமி திருக்கல்யாணமும், திருவீதியுலாவும் நடந்தது. கோவை, கோவில்பாளையம், திருப்பூர் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.