மங்களநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை அமைப்பு
ADDED :3401 days ago
மங்கலம்பேட்டை: மங்களநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மங்கலம்÷ பட்டை மங்களநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை 8ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்÷ னஸ்வர பூஜை, காலை 7:30 மணிக்கு மஹாகணபதி ேஹாமம், 9ம் தேதி மாலை 4:00 மணிக்கு முதல் கால பூஜை, 10ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 5:30 மணிக்கு தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி காலை 9:30 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், பகல் 12:00 மணியளவில் திருத்தேர் உற்சவம் நடக்கிறது. இதையெ õட்டி, கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.