உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் நாளை தீர்த்தக்குட ஊர்வலம்

அவிநாசியில் நாளை தீர்த்தக்குட ஊர்வலம்

அவிநாசி: பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாளை மாலை, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெறுகிறது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உபகோவிலான, ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில்களில், கும்பாபிஷேக விழா, இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. கோவிலருகே அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், மஹா சுதர்ஷன ஹோமம், திவ்யாஹுதி, பூர்ணாஹுதி, சாற்றுமறை தீர்த்த பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடக்கின்றன. இன்று மாலை, 4:00 மணிக்கு யாக பூஜை, நாளை முதல் தினமும், காலை மற்றும் மாலையில், யாக சாலையில், சிறப்பு ஹோம பூஜை நடக்கிறது. நாளை மாலை, 4:00க்கு, தீர்த்தக்குட ஊர்வலம், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் துவங்கி, நான்கு ரத வீதிகள் வழியாக சென்று, பெருமாள் கோவிலை அடைகிறது. இதில், 508 பெண்கள் தீர்த்தக்குடம் சுமந்து செல்கின்றனர். சேக்கிழார் புனிதர் பேரவை சார்பில், ஊர்வலத்துக்கு முன், செண்டை மேளம் மற்றும் நாதஸ்வர இன்னிசை நடைபெறுகிறது. கடவுளர் வேடமிட்ட குழந்தைகள் முன் செல்ல, பெண்களின் கோலாட்டம், கும்மியாட்டம் நடத்துகின்றனர். "வைணமும் ஆச்சார்ய பக்தி நலமும் என்ற தலைப்பில், நாளை மாலை, 6:00க்கு, விஜயமங்கலம் சொக்கலிங்கம் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் அழகேசன், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்தர் பேவையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !