ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :3526 days ago
ஊட்டி: ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில், கிருத்திகை பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், சித்தி செல்வவிநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழு ஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் இன்னிசை, தஞ்சை அருளாளர் ஆனந்தசித்தரன் அருளுரை, ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச் சந்திரன் செய்திருந்தார்.