உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வரர் கோவிலில் 11ல் கும்பாபிஷேகம்

அகத்தீஸ்வரர் கோவிலில் 11ல் கும்பாபிஷேகம்

திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. நாளை, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்குகின்றன. திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின், மகா கும்பாபிஷேகம், வரும், 11ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் நடக்க உள்ளது. வரும், 8ம் தேதி, காலையில் கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மாலையில் கோ பூஜை, தன பூஜை, முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது. இரண்டாம் கால யாக சாலை பூஜை, 9ம் தேதியும், மூன்றாம் கால யாக சாலை பூஜை, மஞ்சள் சாத்துபடி அலங்காரம், நாடி சந்தானம் மற்றும் திரவிய ஹோமம், ஆகியவை, 10ம் தேதியும் நடைபெறுகின்றன. வரும் 11ம் தேதி, காலை 9:00 மணிக்கு மேல், கலச ஊர்வலம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதே நேரத்தில், கோவில் வளாகத்தில் உள்ள வடூக பைவரருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12:00 மணிக்கு, மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !