வடதொரசலூர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
தியாகதுருகம்: வடதொரசலுாரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் கிராமத்தில், விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதேபோல் மாரியம்மன், கெங்கையம்மன், நவநாயகர்கள், பரிவார தெய்வங்களின் சன்னதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் முடிந்து கடந்த 5ம்தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு, வைத்தியநாத குருக்கள், புனித நீரை விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் மகாதீபாராதனை செய்யப்பட்டது. மவுண்ட்பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், மாவட்ட திட்டக்குழுஉறுப்பினர் அய்யப்பா, தர்மகர்த்தா சக்திவேல், கார்த்திகேயன், தண்டபாணி, நாராயணசாமி, ராமலிங்கம், பாண்டியன், சுப்ரமணியன், கண்ணன், முத்துக்கருப்பன், வடிவேல், ஊராட்சிமன்ற தலைவர் இதயகண்ணன், சுப்புமகாலிங்கம் உள்பட சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.