உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சக்தி மாரியம்மன் கோவில் ஆனி திருவிழா

மகா சக்தி மாரியம்மன் கோவில் ஆனி திருவிழா

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த வெள்ளையன்கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோவில் ஆனி திருவிழா இன்று துவங்கி வரும், 10ம் தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகளும், மதியம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும் நடக்கிறது. நாளை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மாலை கரகம் எடுத்தலும் நடக்கிறது. வரும், 9ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மதியம் காரிமங்கலம் ராமசாமி கோவிலுக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டத்துடன் பெண்கள் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !