செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எலச்சிபாளையம்: மாவுரெட்டிபட்டியில், வரும், 14ம் தேதி விநாயகர், செல்வமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அடுத்த, மாவுரெட்டிபட்டி செல்வமுத்து மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 14ம் தேதி நடக்கிறது. முன்னதாக, வரும், 11ம் தேதி காலை, 6 மணி முதல், 7.30 மணிக்குள் கணபதி ஹோமமும், 12ம் தேதி, இரவு, 10 மணிக்குமேல் கிராம சாந்தியும் நடக்கறது. தொடர்ந்து, 13ம் தேதி காலை, 6 மணிக்கு மேல், 7.30 மணிக்குள் மகாலட்சுமி ஹோமமும், 9 மணிக்கு மேல், காவிரிக்கு தீர்த்தம் எடுக்க செல்லுதல், மாலை, 5 மணிக்கு மேல் முளைப்பாரி அழைத்தலும் நடக்கிறது. வரும், 14ம் தேதி, அதிகாலை, 3.30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், காலை, 5 மணிக்குமேல், 6 மணிக்குள் விநாயகர், செல்வமுத்து மாரியம்மன் கோபுர கலசங்களுக்கு தீர்த்தம் ஊற்றி, கும்பாபிஷேகமும் நடக்கிறது.