மருதுார் ரேணுகா மாரியம்மனுக்கு கஞ்சிவார்த்தல் உற்சவ வழிபாடு!
சிதம்பரம்: மருதுார் ரேணுகா மாரியம்மன் கோவிலில் நடந்த கஞ்சி வார்த்தல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த மருதுார் ரேணுகா மாரியம்மன் கோவிலில் கஞ்சிவார்த்தல் உற்சவம் கடந்த 5ம் தேதி நடந்தது. இதனையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனையும்; தொடர்ந்து ரேணுகா மாரியம்மனுக்கு கஞ்சிவார்த்தல் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கஞ்சிவார்த்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்தனர். இரவு வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் மாரியம்மன் புறப்பாடு செய்து வீதியுலா நடந்தது. உற்சவத்தையொட்டி 6ம் தேதி வள்ளி திருமணம் நாடகமும், 7ம் தேதி அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் நடந்தது. இதில் மருதுாரை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ., ராமலி ங்கம் தலைமையில் கிராம மக்கள் செய்தனர்.