ஜூலை 11ல் பழநி மலைக்கோயில் உபகோயில்களில் கும்பாபிஷேகம்!
                              ADDED :3402 days ago 
                            
                          
                          பழநி, பழநி ஞானதண்டாயுதபாணிசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோதைமங்கலம் கோதீஸ்வரர், காமராஜர்நகர் உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயில்களில் ஜூலை 11ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு இரண்டு கோயில்களிலும் நாளை (ஜூலை 9ல்) காலை 7.45 மணி முதல் விநாயகர் பூஜை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. ஜூலை 10ல் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 3ம்கால யாகபூஜையும், ஜூலை 11ல் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோதீஸ்வரர் கோயிலில் காலை 9 மணிக்குமேல் கும்பகலசங்கள் புறப்பாடாகி காலை 9.40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதேபோல உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் காலை 7.25 மணிக்கு கும்ப கலசங்கள் புறப்பாடாகி காலை 9 மணிக்கு கோபுரத்தில் புனிநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.