உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் மாட வீதி தனியார் ஆக்கிரமிப்பு?

கைலாசநாதர் மாட வீதி தனியார் ஆக்கிரமிப்பு?

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் மேற்கு மாட வீதி, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிம் புகார் அளிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், நேற்று காலை, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தலைமையில் நடந்தது. அதில், உத்திரமேரூர் வட்டத்தைச் சேர்ந்த, சிவசக்தி பாலன் என்பவர் அளித்த புகார் மனு:உத்திரமேரூரில் உள்ள கைலாசநாதர் கோவில் மேற்கு மாட வீதியை, சில ஆண்டுகளாக தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர், வட்டாட்சியரிடம் இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் உறுதியான நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !