சப்த கன்னியம்மன் கோவிலில்10ம் தேதி மகா கும்பாபிஷேகம்
குத்தம்பாக்கம்:இருளபாளையம், சப்த கன்னியம்மன் கோவிலில், வரும், 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வெள்ளவேடு அடுத்த, குத்தம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது இருளபாளையம் கிராமம். இங்குள்ள, சப்த கன்னியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் வரும், 10ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, இன்று, 8ம் தேதி காலை, 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், மகா கணபதி ஹோமமும், சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். பின், மாலை, 4:00 மணிக்கு அங்குரார்பணமும், கும்பலங்காரமும், முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். தொடர்ந்து, நாளை காலை, 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், விசேஷ சாந்தியும், அந்தர்யாகமும் நடைபெறும். மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாஹூதியும், மண்டப பூஜையும் நடைபெறும். கும்பாபிஷேக நாளான, வரும், 10ம் தேதி காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை மற்றும் பூர்ணாஹூதியும், புண்யாகவாசம் பஞ்சகவ்யமும், கடம் புறப்பாடும் நடைபெறும். பின், காலை, 9:15 மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து சப்த கன்னியருக்கு மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெறும்.