விரைவில் சுரகரேஸ்வரர் கோவில் திருப்பணி!
ADDED :3473 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பழமை வாய்ந்த சுரகரேஸ்வரர் கோவில் திருப்பணி இம்மாதம் துவங்க உள்ளது. இந்த கோவில் சிவனை வணங்கினால் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. குபேரனுக்கு தீராத நோய் ஏற்பட்டு, இந்த கோவில் குளத்தில் குளித்து, சிவனை வணங்கியதால் நோய் தீர்ந்தது என, புராணங்கள் கூறுகின்றன. இக்கோவில் மூலவர் சுரகரேஸ்வரர் என, அழைக்கப்படுகிறார். தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த பழமையான கோவில், 11ம் நுாற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. 1972ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக, திருப்பணி இம்மாதம் இறுதிக்குள் துவங்கும் என, கூறப்பட்டுள்ளது.