தேனி வேதபுரீ தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தேனி: தேனி அருகே வேதபுரீ சுவாமி சித்பவாநந்த ஆசிரமத்தில் அமைந்துள்ள ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தட்சிணாமூர்த்தி கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி ஜூலை 3ம் தேதி மாலை 6.05 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று காலை 6.30 மணிக்கு எட்டாம் கால பூஜை துவங்கியது. 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடந்தது. பூஜ்யஸ்ரீ ஓங்காரந்தா மகாசுவாமிகள் தலைமையில், பரம பூஜ்ய சுவாமி ஸத்ஸ்வரூபாநந்தர் முன்னிலையில் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, காலை 10 மணிக்கு மேல் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலயா பாடசாலை முதல்வர் ராஜாபட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். காலை 10.30 மணிக்கு மேல் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தட்சிணாமூர்த்தி மூலாலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மூலாலய மகாகும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வேதாந்த சாஸ்திர பிரசார டிரஸ்ட் அறங்காவலர் பரசுராமன், அமைச்சர் பன்னீர்செல்வம், பார்த்தீபன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., அழகர்ராஜா, டாக்டர் விவாகர், அறங்காவலர்கள் பாலகிருஷ்ணராஜா, வெங்கட்ராமன், சுப்பிரமணியன், சமானந்தர், சிங்கப்பூர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர்கள், புரவலர்கள் மற்றும் திருப்பணி தொண்டர்கள் செய்திருந்தனர். தேனி: தேனி அருகே வேதபுரீ சுவாமி சித்பவாநந்த ஆசிரமத்தில் அமைந்துள்ள ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தட்சிணாமூர்த்தி கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி ஜூலை 3ம் தேதி மாலை 6.05 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று காலை 6.30 மணிக்கு எட்டாம் கால பூஜை துவங்கியது. 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடந்தது.
பூஜ்யஸ்ரீ ஓங்காரந்தா மகாசுவாமிகள் தலைமையில், பரம பூஜ்ய சுவாமி ஸத்ஸ்வரூபாநந்தர் முன்னிலையில் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, காலை 10 மணிக்கு மேல் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலயா பாடசாலை முதல்வர் ராஜாபட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். காலை 10.30 மணிக்கு மேல் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தட்சிணாமூர்த்தி மூலாலயம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மூலாலய மகாகும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வேதாந்த சாஸ்திர பிரசார டிரஸ்ட் அறங்காவலர் பரசுராமன், அமைச்சர் பன்னீர்செல்வம், பார்த்தீபன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., அழகர்ராஜா, டாக்டர் விவாகர், அறங்காவலர்கள் பாலகிருஷ்ணராஜா, வெங்கட்ராமன், சுப்பிரமணியன், சமானந்தர், சிங்கப்பூர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர்கள், புரவலர்கள் மற்றும் திருப்பணி தொண்டர்கள் செய்திருந்தனர்.