வெள்ளையூர் பெருமாள் கோவிலில் யாகசாலை துவக்கம்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா வெள்ளையூர் செல்வ விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் இன்று மகா ஸம்புரோஷணம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று மாலை யாக சாலை ேஹாமங்கள் துவங்கியது. இதில் தர்மகர்த்தா ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர் அய்யாதுரை மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று காலை 7.00 மணிக்கு யாக சாலை ேஹாமங்கள் துவங்குகின்றது. காலை 9.00 மணிக்கு பூர்ணாஹூதி, காலை 9.15 மணிக்கு கும்பங்கள் புறப்பாடும், காலை 10.15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு ஸம்புரோஷணம் நடக்கிறது. பிற்பகல் 12 மணிக்கு பெருமாள் ஸம்வத்ஸர திருமஞ்சனமும், மாலை பஜனை கோஷ்டிகளுடன் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. திருக்கோவிலுார் ஜீயர் மடாதிபதி சுவாமி ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரியார் சுவாமி தலைமையிலும், டாக்டர் ரங்காச்சாரியார் சுவாமி முன்னிலையில் மகா ஸம்புரோஷணம் நடக்கிறது.