உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை: இளையான்குடி அருகே பகைவரைவென்றான் கூத்த பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி ஜூலை 7 காலை கணபதி ஹோமம், ஜூலை 8 மாலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை, மாலை 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தன. நேற்றுமுன்தினம் காலை 8 மணிக்கு 2 ம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு 3 ம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு கோ பூஜை, கஜபூஜை நடந்தன. நேற்று காலை 7 மணிக்கு 4 ம் கால யாகசாலை பூஜை, காலை 10:30 மணிக்கு கும்பம் புறப்பாடு நடந்தன. காலை 11 மணிக்கு விமான ராஜகோபுரத்திற்கும், காலை 11:30 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தன. மாலை மகா அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !