அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3388 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சேவூர் கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில், கிராம மக்களால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நவக்கிரக யாகசாலை பூஜை அமைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, நவக்கிரக பூஜை, கோ பூஜை, தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டது. தொடர்ந்து வேத விற்பன்னர்கள் நவக்கிரக யாக சாலை பூஜையில் வைக்கப்பட்ட கலச நீரை கொண்டு கலசத்தின் மீது நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் மற்றும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.