உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது.  ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த  அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், ஆனி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 7 ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 8 ம் தேதி இரவு  7:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, நந்தி வாகன வீதியுலா நடந்தது.   தொடர்ந்து 8 நாட்கள் ராவ÷ னஸ்வரர், பூதம், ரிஷிபம், யானை உள்ளிட்ட வாகனங்களில் இரவு சுவாமி வீதியுலாவும், 9ம் நாள் மதியம் 3:30 மணிக்கு, தேர்த் திருவிழாவும்  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !