உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் செப்புத்தேரோட்டம் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் செப்புத்தேரோட்டம் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரியாழ்வார் ஆனிசுவாதி திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் செப்பு தேரோட்டம் நடந்தது. கடந்த 4ம் தேதி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலிலுள்ள பெரியாழ்வார் சந்நிதியில், ஆனி சுவாதி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் திருநாளில், காலை 8.20 மணியளவில் பெரியாழ்வார் செப்புதேருக்கு எழுந்தருளினர். ரகுராம பட்டர் தலைமையில் அனந்தராமன்,சுதர்சனன், வெங்கடேச பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து 4 ரதவீதிகளில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் அறநிலையத்துறை அ<லுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !