திருமலையில் அங்க பிரதட்சணம்: ஆதார் அட்டை கட்டாயம்!
ADDED :3417 days ago
திருப்பதி: திருமலையில், வெள்ளிக்கிழமை தவிர, மற்ற நாட்களில், பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்கின்றனர். இதற்காக காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை திருமலையில் உள்ள விஜயா வங்கியில், அங்க பிரதட்சண டிக்கெட் வழங்கப்படுகிறது. அதிகாலை 1:30 மணிக்கு, அங்க பிரதட்சணம் செய்ய பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அந்த டிக்கெட் வழங்க, தேவஸ்தானம், ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது.