உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திறப்பு!

வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திறப்பு!

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் திருவிழாவை அடுத்து, குண்டம் கண் திறக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மிகவும் பழமை வாய்ந்தது மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இக்கோவிலில், 25வது ஆண்டு ஆடிக்குண்டம் விழா வரும், 19ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்குகிறது. விழா நடைபெறுவதை அடுத்து, குண்டம் கண் திறப்பு (குண்டம் திறப்பு) நிகழ்ச்சி நேற்று நடந்தது. அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை செய்து, குண்டம் இறங்கும் வளாகம் அலங்கரிக்கப்பட்டது. தலைமை பூசாரி பரமேஸ்வரன் குண்டத்தை வலம் வந்து சிறப்பு பூஜை செய்தார். பூசாரியும், கோவில் உதவி கமிஷனர் ராமுவும் குண்டத்தை திறந்து வைத்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !