சாயல்குடியில் புரவி எடுப்பு விழா கோலாகலம்!
ADDED :3418 days ago
சாயல்குடி: சாயல்குடி கண்மாய் பகுதிக்குள் அமைந்துள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா கோலாகலமாக நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதத்தில் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் மண்ணால் செய்யப்பட்ட குதிரை, மனித உருவங்கள், தவழும் பொம்மை, உடல் உறுப்புகள் உள்ளிட்டவைகளை செய்து வண்ணம் தீட்டி, அவற்றிற்கு ஆடை அணிவித்து ஊர்வலமாக நகரின் வீதிவழியாக எடுத்து வந்தனர். மூலவர் நிறைகுளத்து அய்யனாருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்து கொள்வதற்காகவும், நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகவும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.