பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது. தேனி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற அம்மன் ஆலயங்களில், பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலும் ஒன்றாகும். பக்தர்கள் வேண்டுவரம் தந்து, சகல ஐஸ்வர்யங்களை வழங்கி வருகிறது என்பது ஐதீகம். பெரியகுளத்திலிருந்து பிழைப்புக்காக வெளியூர் சென்றவர்கள் எங்கிருந்தாலும், திருவிழா காலங்களில் அம்மனை குடும்பத்துடன் தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. திருவிழா ஜூலை 5 ம் தேதி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (ஜூலை 11) கொடியேற்றத்துடன் தி ருவிழா துவங்கியது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அம்மன் குதிரை, யானை, பூபல்லாக்கு, அன்னபட்ஷி, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முக்கிய திருவிழாவான ஜூலை 19ல் மாவிளக்கு வழிபாடும், 20 ம்தேதி அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மண்டக்கப்படிதாரர்கள், வர்த்தகபிரமுகர்கள், ஆன்மிக பக்தர்கள் கலந்து கொண்டனர்.