தீர்த்தக்கரை ஈஸ்வரர் கோவிலுக்கு வண்ணம்
ADDED :3417 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக்குள விழாவையொட்டி பிரபராம்பிகை சமேத தீர்த்தக்கரை ஈஸ்வரர் கோவிலுக்கு வண்ணம் தீட்டப்படுகிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சங்குதீர்த்தக்குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கும் சிறப்புடையது. ஆகஸ்ட் 2ல், சங்கு தீர்த்தக் குளத்தில் புஷ்கர மேளா எனப்படும் புனித நீராடல் மற்றும் லட்ச தீப விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சங்கு தீர்த்தக் குளத்தின் அருகே உள்ள பிரபராம்பிகை சமேத தீர்த்தக்கரை ஈஸ்வரர் கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் மற்றும் குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டப கோபுரங்கள் பழுதுபார்க்கப்பட்டு வண்ணம் தீட்டும்பணி நடக்கிறது.