உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமை வாய்ந்த பஜனை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

பழமை வாய்ந்த பஜனை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

வெள்ளலுார், வெள்ளாளபாளையத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பஜனை கோவில் என்றழைக்கப்படும், ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. பக்தர்கள், மெய்யன்பர்களின் பொருளுதவியால், புதிதாக கோவில், நுாதன மூலஸ்தானம், ஆர்த்தமண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம், நுாதன விமானம் மற்றும் பல்வேறு சன்னதிகள் ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இன்று லீகாலை, 7:00 மணிக்கு, சேவாகாலம், நான்காம் கால ேஹாமத்தை தொடர்ந்து, குடங்கள் விமான கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள், அனைத்து விமான கோபுரங்கள், ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள் மற்றும் அனைத்து பரிவார தேவதைகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. பிற்பகல், 3:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், மாலை, 5:00 மணிக்கு, சுவாமி கருட வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !