ஆலம்பூண்டி ராமர் கோவில் கும்பாபிஷேகம்
செஞ்சி: ஆலம்பூண்டி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. செஞ்சி தாலுகா ஆலம்பூண்டியில் உள்ள சீதா, ராமர், லட்சுமணர், பக்த ஆஞ்சநேயர் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் இன்று நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று பகல் 2:00 மணிக்கு உற்சவ மூர்த்திகள் கிரிவலம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பகவத் அனுக்கிரஹம், ஆச்சார்ய வர்ணம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், அஷ்டபந்தன பிரதிஷ்டை, மகா சாந்திஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறையும், இரவு பிம்ப வாஸ்து, திரவிய ஹோமம், நவகலச திருமஞ்சனம், பிரதான ஹோமம், நடந்தது. இன்று காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், கோபூஜை, புண்யாஹம், அக்னி பூஜை, கும்ப பூஜை, ததுத்த ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடும், 7:00 மணிக்கு கும்பாபிஷகமும், 7:30 மணிக்கு மூலவர் அபிஷேகம், சாற்று முறை, தீர்த்த பிரசாத விநியோகம் செய்ய உள்ளனர்.