உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்ராஜன்குப்பம் கோவில் நிலம் அபகரிப்பு:கலெக்டரிடம் புகார்

மல்ராஜன்குப்பம் கோவில் நிலம் அபகரிப்பு:கலெக்டரிடம் புகார்

விழுப்புரம்: மல்ராஜன்குப்பம்  கிராமத்தில் கோவில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.   இதுகுறித்து கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள புகார்  மனுவில் கூறியிருப்பதாவது; கண்டமங்கலம் ஒன்றியம், பூதுார் ஊராட்சி மல்ராஜன்குப்பம் கிராமத்தில்,   ஸ்ரீதேவி, முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ஒற்றுமையாக கோவில் திருவிழா கொண்டாடினோம். கடந்த 2011ம் ஊர் நாட்டான்மையாக இருந்த கமலக்கண்ணன் இறந்ததையடுத்து, அவரது மனைவி சாந்தலட்சுமி, சகோதரர்கள் கண்ணதாசன், வேணுகோபால், கிருஷ்ணராஜ் ஆகியோர்  திருவிழா நடத்தினர்.  இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை, கண்ணதாசன் தனக்கு சொந்தமானது என்று போலி ஆவணம் தயார் செய்து தனது பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளார்.மேலும்,வேறுயாரும் கோவிலுக்கு போகக்கூடாது என கோவிலை பூட்டி வைத்துள்ளார். கோவில் நிலம் தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் ஆடி மாதம் காவடி பூஜை நடக்கவுள்ளதால் பிரச்னை இல்லாமல் திருவிழா நடத்துவதற்கும், போலி ஆவணங்கள் தயாரித்து கோவில் சொத்துகளை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !